அன்பு நண்பர்களே,
இன்னும் இரண்டு நாட்களிள் கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுதும் கொண்டாடப்படவிருக்கிறது. இந்த விழாவினைப் பற்றிச் சில செய்திகளை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இது ஏதோ கிறிஸ்தவர்களுக்கு மட்டுமான விழா என்று நினைத்தால் அது தவறான சிந்தனைக்கு வழிகோலும்.இயேசு எதற்க்காக இந்த உலகில் பிறந்தார்? அவர் தன் வாழ்நாளில் எதைச் சாதித்தார்? அவர் கடவுள்தானா? இல்லை இறைவாக்கினரா? போன்ற கேள்விகள் இயல்பாக நம்மில் எழுகிறது.
இயேசுவின் பிறப்பு பற்றி கிறித்தவ மறைநூலாகிய விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாடு தகவல் தருகிறது.குறிப்பாக, மத்தேயு, லூக்கா என்னும் நற்செய்திகள் தருகின்ற தகவற்படி, கபிரியேல் என்ற இறைத்தூதர், கன்னி மரியாளிடம் பரிசுத்த ஆவிமூலமாக இயேசு பிறக்கப்போவதை அறிவித்தார். அச்சமயம் மரியாள் யோசேப்பு என்பவருக்கு மணமுடிக்க நிச்சயிக்கப் பட்டிருந்தார். மரியாள் கற்பமாயிருப்பதை தெரிந்து கொண்ட யோசேப்பு மரியாளை இரகசியமாக விலக்கிவிட நினைத்தார். இறைத்தூதர் யோசேப்புக்கு தோன்றி மரியாள் கருத்தரித்திருப்பது பரிசுத்த ஆவியினால் என்பதை தெரிவிக்கவே யோசேப்பு மரியாளை மனைவியாக ஏற்றுக்கொண்டார்.
மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த உரோமைப் பேரரசன் அகுஸ்துஸ் மக்கள் தொகை கணிப்பீடு ஒன்றை கட்டளையிட்டார். அவர் கட்டளைப்படி யோசேப்பும் மரியாளும் தங்களை பதிவு செய்ய யோசேப்பின் முன்னோரான தாவீதின் நகரமானபெத்லகேமுக்குச் சென்றனர். தங்குவதற்கு அறைகள் கிடைக்காத நிலையில் மாட்டுத் தொழுவமொன்றில் தங்கினார்கள். அம் மாட்டுத் தொழுவத்தில் மரியாள் இயேசுவை பெற்றார்.
இயேசு பிறந்த நேரம், அருகிலுள்ள புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இடையருக்கு இறைத்தூதர் தோன்றி பெத்லகேமில் இரட்சகர் பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவிக்கிறார். மேலும் பரலோக இறைத்தூதரனைவரும் அவர்கள் முன் தோன்றி "உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமையும், இப் பூமியில் நன்மனதோருக்கு அமைதியுமாகுக" என பாடினர். இடையர் எழுந்து நகருக்குள் சென்று குழந்தை இயேசுவை கண்டு வணங்கினார்கள்.
அவர் இறுதியாக கொல்லப்பட்டார். ஆனால் இறப்பைப் பற்றிய பயம் அவருக்கு இல்லை. பிறப்பு நிகழ்வின் போது இறப்பைப் பற்றி நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்ற கேள்வி உங்களில் எழும். அவர் பிறந்ததே மக்களுக்காக இறக்க வேண்டும் என்றுதான். ஆனால் அதற்கு முன்பு வழி தவறிய ஆடுகளைச் சரி படுத்த, நெறி படுத்த அவர் தன் வாழ்நாட்களை பயன் படுத்தினார்.
இன்று கடவுளின் பெயரில் நடக்கும் அவலங்கள் ஏராளம். அதே சமயம் ஒரு செய்தியை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். கடவுள் பெயரில் தவறுகள் நடைபெற பல நேரங்களில் நாம்தான் காரணம். கண்மூடித்தனமான பழக்கவழக்கங்களை நாம் முதலில் விட வேண்டும். கடவுள் மனிதனிடம் எதிர்பார்ப்பது காணிக்கைகளை அல்ல. மக்கள் ஒருவரை ஒருவர் மதிக்க, நேசிக்க, வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்றுதான் கடவுள் விரும்புகிறார்.
பழைய ஏற்பாட்டில் எசாயா நூலில் வருகின்ற "ஒடுக்கப்பட்டோர்", "உள்ளம் உடைந்தோர்", "சிறைப்பட்டோர்", "கட்டுண்டோர்" ஆகிய அனைவருமே "ஏழைகள்." அவர்களுக்கும், எல்லாவித அடக்குமுறைகளால் துன்புறும் அனைவருக்கும் விடுதலையும் விடியலும் வழங்குபவர் இறைவன். அதுவே கடவுளடமிருந்து வருகின்ற "நற்செய்தி" (நல்ல + செய்தி). இப்பின்னணியில் இயேசுவின் போதனைப் பணி புரிந்துகொள்ளப்பட வேண்டும். மக்களுக்கு வி்டுதலை வழங்க இயேசு கையாண்ட ஒரு வழியே அவரது போதனைப் பணி.
இயேசு வழங்கிய மலைப்பொழிவின் தொடக்கப்பகுதியை இங்கு இணைக்கிறேன்
மத்தேயு 5:1-12
இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
துயருறுவோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.
கனிவுடையோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர்.
இரக்கமுடையோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்;
ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்."
இதனை நான் எதற்க்காக குறிப்பிடுகிறேன் என்றால் கடவுள் துன்புறுவோரை கைவிடுவதில்லை.
இன்றும் கடவுளை நேசிக்கும் பலருக்கு மனிதரை நேசிக்க நேரமில்லை அல்லது அவர்கள் விரும்பவில்லை. உங்களால் முடிந்த வரை உங்களுக்கு அடுத்திருப்போரை அன்பு செய்யுங்கள். பிறகு கடவுளை நேசிக்கலாம். அதைதான் வேதங்கள் சொல்கின்றன.
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா " என்று பாடினான் ஒரு கவிஞன். இந்தக் கருத்து
இவ்வுலக வாழ்க்கைக்கு மிக மிகப் பொருத்தமான கருத்து.
இவ்வுலக வாழ்க்கைக்கு மிக மிகப் பொருத்தமான கருத்து.
மரணம் என்பது எம் ஒவ்வொருவருக்கும் நிச்சயமான ஒன்று. எவ்வாறு நாம் வாழ வேண்டும், எவ்வாறு
வாழக்கூடாது என்று எடுத்துக் கூறுவதே இம்மலைப்பொழிவு வாக்குறுதிகள் ஆகும்.
மனிதன் இவ்வுலக வாழ்வின் மீது ஈர்ப்புக் கொண்டு
உலகப்பொழிவுகளை கடைப்பிடித்து வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றான்.
உலகப்பொழிவுகளை கடைப்பிடித்து வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றான்.
- நம்முடைய அயலார் பசியாயிருந்தால் உணவு கொடுங்கள்.
- தாகமாயிருதால் தாகத்தை தணியுங்கள். இங்கே மதம் முக்கியமல்ல, மனங்கள் மட்டுமே முக்கியமாக கருதப்படுகின்றது.
- தாகமாயிருதால் தாகத்தை தணியுங்கள். இங்கே மதம் முக்கியமல்ல, மனங்கள் மட்டுமே முக்கியமாக கருதப்படுகின்றது.
மற்றவர்களுக்கு நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால்
உங்களுக்கும் அளக்கப்படும். அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள் என்று இயேசு கூறுகின்றார்.
உங்களுக்கும் அளக்கப்படும். அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள் என்று இயேசு கூறுகின்றார்.
உதாரணமாக :
நீங்கள் மற்றவர்களுக்கு 10 ரூபா கொடுத்தால் அது உங்களுக்கு 50 ரூபாயாக வந்து சேரும்.
நீங்கள் நன்மை செய்தாலும், தீமை செய்தாலும் அதன் பலன் உங்களுக்கே திருப்பிக் கிடைக்கும். நம்மில் பலர் நம் அனுதின வாழ்வில், நாம் செய்கிற எந்த ஒரு செயலையும் இது நீதியானதுதானா இல்லையா என்பதை தராசில் வைத்து நிறுத்துப் பார்க்காமால் ஏனோதானோவென்றுதான் இருக்கிறோம். அதை நாம் திருத்தி கொள்ள வேண்டும். இந்த சிந்தனையோடு வரும் கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பியுங்கள். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

No comments:
Post a Comment